அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் பொதுஹெர கிராமிய குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் விவசாய கிராமிய பொருளாதார மற்றும் நீர்பாசன கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான அமீர் அலியின் நிதியொதுக்கீட்டில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீரின் ஆலோசனையில் குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் இர்பான், பிரதேசசபை உறுப்பினர் சபீர் மற்றும் பொதுஹெர வட்டார வேட்பாளர் ரஜாப்தீன் ஆகியோரின் வேண்டுகோளுக்கினங்க குருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்களில் உள்ள குளங்களுக்கு நன்னீர் மீன்களை விடும் திட்டம் அன்மையில் ஆரம்பமானது.

எனவே இதன் மூன்றாம் கட்டமாக குளியாப்பிடிய பிரதேசசபைக்கு உற்பட்ட பொதுஹெர கிராமிய குளத்துக்கு மீன்களை விடும் நிகழ்வு இன்று (24) இடம்பெற்றது.

இத்திட்டத்தில் குளங்களை அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டு குளங்களை தெரிவு செய்து சுமார் 15,000 மீன்கள் விடப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னால் முன்னால் அமைச்சர் பியசோம உபாலி, முன்னால் மாகாணசபை உறுப்பினர் நஸீர்,பிரதி தலைவர் இர்பான், நீரியல்வல அதிகரிகள், மற்றும் ஊர் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.