அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி இளைஞரணி ஒன்று கூடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், சட்டத்தரணியுமான முஷர்ரப் முதுநபீன் அவர்கள் இன்று (2019-03-23) மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற அ.இ.ம.காங்கிரஸின் இளைஞர் ஒன்று கூடலில் கலந்து சிறப்பித்ததுடன், மாவடிப்பள்ளி கமு/அல் அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அங்கு கடந்த வாரம் ஊருக்குள் உட்புகுந்த காட்டு யானை பாடசாலை மதில்களை தாக்கிய சேதங்களைப் பார்வையிட்டதுடன், பாடசாலையில் நிலவும் தளபாடப் பற்றாக்குறை, மற்றும் ஏனைய குறைபாடுகள் தொடர்பாக பாடசாலை அதிபர் சைபுடீன் அவர்களுடன் கலந்துரையாடினார்.

அவசரமாக செய்ய வேண்டிய அபிவிருத்திச்
செயற்பாடுகளை இன்ஷா அல்லாஹ் அடுத்தவாரம் ஆரம்பிப்பதாக கூறியதுடன், ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக கட்சியின் தலைவரும் அமைச்சருமான அல்ஹாஜ் Rishad Bathiudeen அவர்களுடன் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் அ.இ.ம.காங்கிரஸின் காரைதீவுப் பிரதேச சபை உறுப்பினர் எம். ஜலீல், மத்திய குழுத் தலைவர் ஜெமீல், மத்திய குழு உறுப்பினர்களுடன் கட்சியின் இளைஞரணியும் ஏனைய ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.