அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பேருவளை பிரதேசபை உறுப்பினரின் வேண்டுகோளை அடுத்து தர்கா நகர் பாலர்பாடசாலை உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது…

பேருவளை பிரதேச சபை உருப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேருவளை தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஹஸீப் மரிக்காரினால் சபையில் தொடர்ச்சியாக முன்மொழியப்பட்டு வந்த கோரிக்கையையடுத்து, தர்கா நகர் பலர் பாடசாலை உத்தியோகப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

பேருவளை பிரதேசத்தில் தர்கா நகர் , பயாகளை , அழுத்கமை , வாராபிட்டிய, மாலேவன்பத்தை ஆகிய பிரதேசங்களில் பாலர் பாடசாலைகள் இயங்குகின்றன. இதில் ஏனைய பாலர் பாடசாலைகள் அந்தந்தக் காலங்களிலே பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 1996 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட தர்கா நகர் பாலர் பாடசாலை எந்தவித உத்தியோகபூர்வ பதிவுகளுமின்றி காணப்பட்டுள்ளமை வேதனைக்குரியது.

பேருவளை பிரதேச பிரிவுகளுக்கு உட்பட்ட பதிவின்றி இருக்கும் ஏனைய பாலர்பாடசாலைகளையும் பதிவு செய்ய சபையில் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார் பேருவளை பிரதேசபை உறுப்பினர் ஹஸீப் மரைக்கார்…