அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட இளைஞர் மாநாடு!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட இளைஞர் மாநாடு கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷாரப் தலைமையில் இன்று (06) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கெளரவ அதிதிகளாக கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சர் ரவி கருணாநாயக்க, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகம, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, பிரதியமைச்சர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், அனோமா கமகே, பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.