அபிவிருத்தி செய்யப்பட்ட கதிரானவத்தை பிரதேச வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

கொழும்பு – 15, மட்டக்குளி, கதிரானவத்தை பிரதேச மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்  ரபீக்கின் வேண்டுகோளுக்கிணங்க, புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட கதிரானவத்தை பிரதேச வீதியை மக்கள் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வு, முன்னாள் எம்.பி முஜிபுர் ரஹ்மானின் பங்கேற்பில் இடம்பெற்றது.

இன்று காலை (08) இடம்பெற்ற இந்த நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான பாயிஸ் மற்றும் கட்சியின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.