அப்துல்லா மஹ்ரூப் எம் பி தலைமையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பான விழிப்பூட்டல் கூட்டம்

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் 
அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
மாவட்ட காரியாலய முன்றலில் (கிண்ணியா புஹாரி சந்தி) திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கான உள்ளுராட்சி மன்றங்களின் வட்டார , மாகாண எல்லைநிர்னயங்கள்தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது.

இதில் திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடும் மற்றும் அப்பிரதேச கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான விளக்கங்களை பெற்றுகொண்டனர்.