அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் பொறுப்பாளர் – மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

அமெரிக்க தூதுவராலயத்தின் அரசியல் பொறுப்பாளர் ஜொன்னா (Joanna H Pritchett) மற்றும் நஸ்ரின் மரைக்கார் (Nazreen Maraikkar) தலைமையிலான குழுவினர், அம்பாறை மாவட்ட மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்தின் இல்லத்தில் நேற்று (12) இடம்பெற்ற இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் சட்டத்தரணி முஷாரப்பும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது, அம்பாறை மாவட்டத்தின் தற்போதைய அரசியல் களநிலவரங்கள் தொடர்பில், விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.