அமைச்சர் றிஷாத் பதியுதீனின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளராக ஏ.ஆர்.எம்.ஜிப்ரி

பிரபல ஊடகவியலாளரும், அதிபருமாகிய ஏ.ஆர்.எம்.ஜிப்ரி கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனையைப் பிறப்பிடமாக கொண்ட இவர், பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரி, பாணந்துறை அல்-பஹ்ரியா மத்திய கல்லூரி, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி ஆகிய 1 ஏபீ தரப் பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார்.

கல்வி இளமாணி (சிறப்பு), கல்வி முதுமாணி, விசேட கல்வி டிப்ளோமா, விவசாய டிப்ளோமா ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ள இவர், கடந்த 2010 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இலங்கை கல்வி நிர்வாக சேவையிலும் நியமனம் பெற்றுள்ளார்.

இவர் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை என்பனவற்றின் பழைய மாணவராவார்.