அல் அமான் அறபிக் கல்லூரிக்கான சுற்றுமதிலுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு.

கிண்ணியா ஏழுபுளியடி கிராமத்தில் உள்ள அல் அமான் அறபிக் கல்லூரியின் சுற்றுமதில் நிர்மாணிப்புக்காக அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது நேற்று (05) மாலை துறை முகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வர்த்தகவாணிப கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற திட்ட செயலணி ஊடாக சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் இச் சுற்றுமதில் நிர்மாண நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது.
இவ் நிகழ்வில் கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான நிஸார்தீன் முஹம்மட்,எம்.எம்.மஹ்தி மற்றும் கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர்களான ராலியா,அஸ்மி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்..