அ.இ.ம.காங்கிரஸினால் மாவடிப்பள்ளியில் 6 மாத கால தையல் பயிற்சிநெறியை நிறைவு செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னால் அமைச்சருமான அல்ஹாஜ் றிஸாட் பதியுதீன் அவர்களினால் அவர் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் மாவடிப்பள்ளியிலுள்ள 20 யுவதிகளுக்கு சுயதொழிலை மேற்கொள்ளுவதற்காக, 06 மாதகாலம் தையல் பயிற்சி நெறிகளைப் பெறுவதற்காகவும் தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டு பயிற்சி நெறிகளும் ஆரம்பிக்கப்பட்டது.

அப் பயிற்சி நெறியை நிறைவு செய்த யுவதிகளுக்கு தங்களது சுயதொழிலை மேற்கொள்ளுவதற்காக பெறுமதி வாய்ந்த தையல் இயந்திரங்கள் இன்று 13.02.2020 வழங்கி வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

இந் நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம். ஜலீல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழு செயலாளர் இம்தியாஸ், மத்திய குழு உறுப்பினர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தோர் போன்றோர் கலந்து சிறப்பித்து தையல் இயந்திரங்களையும் வழங்கி வைத்தனர்.