அ.இ.ம. காங்கிரஸின் அம்பாரை மாவட்ட செயற்குழு கூட்டம்.

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கௌரவ அல்-ஹாஜ் றிசாட் பதியுதீன் அவர்கள் அம்பாரை மாவட்டத்திற்கான அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு 20-10-2019, இன்று நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள அமீர் பிளேஸில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் M.A.M. தாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவை ஆதரிப்பதோடு தேர்தலை எப்படி நாம் முன்னெடுத்து செல்வது பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரமுகர்களாலும் கட்சித் தொண்டர்களாலும் பல கேள்விகளாக நாம் ஏன் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் அப்படி வாக்களிப்பதால் நமது முஸ்லீம் சமுகம் எதிர்கொள்ளப் போவது என்னவென்ற கேள்விகள் பல கேட்கப்பட்டு அதற்குரிய பதில்களை அமைச்சரால் வழங்கப்பட்டது.

மேலும் இச்செயற்குழு கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊர் பிரமுகர்கள்யென ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.