ஆவணங்கள் துரிதமாக பதிவு செய்யும் ஒருநாள் வேலைத்திட்ட அங்குராப்பண நிகழ்வு மன்னாரிலும் இடம்பெற்றது.

ஆவணங்கள் துரிதமாக பதிவு செய்யும் ஒருநாள் வேலைத்திட்ட அங்குராப்பண நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்திலும் இடம்பெற்றது.

ஐனாதிபதிஇ பிரதமர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன திடசங்கற்பத்திற்கமைய நேற்று சனிக்கிழமை (16.03.2019) நாடு பூராகவும் இவ் நிகழ்வு நடைபெற்றபொழுது மன்னார் மாவட்டத்திலும் இவ் நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இவ் நிகழ்வில் அமைச்சர் றிசாட் பதியுதீயின் பிரதிநிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் றிசாட்டின் பிரத்தியேக செயலாளருமான ரிப்கான் பதியூதின் இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இவ் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.மோகன்ராஸ்இ பிரதேச செயலாளர்கள் மன்னார் சிரேஷ;ட சட்டத்தரனியும் மன்னார் சட்டத்தரனி சங்க செயலாளருமான எம்.எம்.சபூர்தீன் உட்பட பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இவ் நிகழ்வின்போது சொற்ப நேரத்துக்குள் இருவர் காணியை பதிவு செய்து தங்கள் உறுதிப் பத்திரங்களை பெற்றுக் கொண்ட நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.