இந்தியா – பாகிஸ்தான் பேச்சு ரத்து!

இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வருகிற 25ம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெறுவதாக இருந்தது ரத்தாகியுள்ளது.

காஷ்மீர்  தலைவர்களை இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சந்தித்துப் பேச இருப்பதன் காரணமாக, இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து தலையிட்டு வருவதால் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலருடன் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சூழல் சரியில்லாத காரணமே இந்த பேச்சுவார்த்தை ரத்தானதற்கு முக்கியக் காரணம் என்றும் அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.