இந்திய மீனவர்களின் படகுகளை ஒருபோதும் கையளிக்கமாட்டோம் – அமைச்சர் ராஜித

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை அவர்களிடம் மீண்டும் கையளிக்கப் போவதில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச் சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 94 பேர் இந்திய சுதந்திரதினத்தையயாட்டி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய விடுதலைசெய்யப்பட்டனர். எனினும், அவர்களிடமிருந்தும் முன்னர் கைதாகி விடுதலைசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள 69 படகுகளைத் தாம் விடுவிக்கப்போவதில்லை என அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் புதுடில்லியில் எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை – தமிழ்நாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கிடையிலான பேச்சொன்றும் இடம்பெறவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (so)