இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் கே.நவாஸ்கனி – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சந்திப்பு!

முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத் தலைவரும் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ கே.நவாஸ்கனி அவர்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று (12) கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
 
இதன் போது, இந்தியா – இலங்கை நாடுகளின் சமகால விவகாரங்கள் மற்றும் இரு நாட்டு உறவுகள் குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.
 
இக்கலந்துரையாடலில், திருச்சி ஊடகவியலாளர் எம்.கே.ஷாகுல் ஹமீது அவர்களும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.