இராஜாங்க அமைச்சர் அமீர் அலி நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு!!!

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு தனது பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் போட்டோ கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு மற்றும் உள்ளக கொங்கீரிட் பாதை திறப்பு விழா ஆகிய நிகழ்வுகள் இன்று வைத்திய அத்தியட்சகர் டாக்டர்  மதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதாரஇராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், வைத்தியர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.