இளைஞர்களின் சக்திக்கு பின்னால் தான் எதுவும்-வேட்பாளர் றிப்கான் பதியுதீன்

 

மன்னார் மாவட்டத்தில் இளைஞர்களைின் திறமைகளை இன்ம் கண்டு அவற்றை தேசிய மட்ட நாட்டின் அபிவிருத்திக்கான திட்டங்களை தாம் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக வடமாகாண சபைக்கு மன்னார் மாவட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக போட்டியிடும் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் உப்புக்குளம் ஜக்கிய மக்கள் சதந்திர முன்னணி அலுவலகத்தில் சற்று முன்னர் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் வேட்பாளர் றிப்கான் பதியுதீன் பேசுகையில் –
இளைஞர்களின் பலம்  இந்த நாட்டினதும்,எமது மாவட்டத்தினதும் வளர்ச்சிக்கு அளப்பறிய பங்களிப்பினை பெற்றுத் தரக் கூடியது.அதனை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதற்கு இளைய தலைமைகள் அரசியலில் உருவாக்கப்பட வேண்டும்.அந்த பயணத்தை தற்போது தான் இந்த தேர்தல் மூலம் ஆரம்பித்துள்ளேன்.
கற்றவர்கள்,புத்திஜீவிகள் எமக்கு ஆலோசனை வழங்கிவருகின்றார்கள்.அவர்களது அனுபவம் எமக்கு பெரும் தளமாக அமைந்துள்ளது.அதை அடியொட்டி நவீன சிந்தணைகளுடன் செயற்படக் கூடிய இளைஞர்களை உருவாக்குவதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.

 

மன்னார் மாவட்டத்தில் காணப்படும் இளைஞர்கள் இந்த மாவட்டத்தின் முதுகெலும்புகள்,அவர்களது உள்ளடக்கிடக்கைகளை ஒரு இளைஞனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ள வேட்பாளர் றிப்கான் பதியுதீன்,இளைஞர்களே எமது மாவட்டத்தின் எதிர்கால தலைவர்கள் என்பதாகவும் கூறினார்