இளைஞர்களுக்கான Tshirt வழங்கும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில், இளைஞர்களுக்கான Tshirt வழங்கும் நிகழ்வு, நேற்று மாலை (16) ஓட்டமாவடியில் இடம்பெற்றது.

அமைப்பாளர் ஜெளபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலி கலந்துகொண்டு Tshirt களை வழங்கிவைத்து உரையாற்றினார்.

பெருந்திரளான இளைஞர் பட்டாளம் ஒன்றுகூடிய குறித்த நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் ஆசிரியர், நெளபர், சட்டத்தரணி ராசிக், வட்டாரக் குழு தலைவர்களான நாஸர், றிஸ்வி, நஜிமுதீன், சமீம் மற்றும் முன்னாள் தவிசாளர் ஹமீட் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பிரமுகர்களும் கலந்துசிறப்பித்தனர்.