இளைஞர்களை முன்னேற்ற நீங்கள் செய்யும் பனி பாராட்டப்பட வேண்டிய ஒன்று

வவுனியா அல் மதார் விளாயாட்டுக்கழகத்திற்கு உதைப்பந்தாட்ட பாதணிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் போன்றவை  வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது

இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக விளையாட்டு மற்றும் கல்வி போன்ற விடயத்தில் விசேட கவனம் கொண்டு செயட்படும் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களினால் வன்னி மாவட்டத்தில் இயங்கும்  இளைஞர் கழகங்களுக்கு “விளையாட்டு உபகரணம் சீருடை மற்றும் பாதணிகள்” வழங்கும்  திட்டத்திலேயே வவுனியா அல் மதார் கழகத்திற்கு இந்த பொருட்கள் இன்றயதினம் வழங்கிவைக்கப்பட்டது

இதன்போது றிப்கான் பதியுதீன் அவர்களுக்கு நன்றி தெரிவித்த வீரர்கள் உண்மையில்” இன்றய காலகட்டத்தில் வறுமையில் இருக்கின்ற சில இளைஞர்கள் சிறந்த வீரர்களாக இருந்தும் போதியளவு வசதி இன்மை காரணத்தினால் அவர்களுடைய திறமைகளும் மண்ணாகி விடுகின்றது அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் இந்த நாட்டிற்கு எவ்வாறு பல  உதவிகளை செய்கின்றார்களோ அதே போன்று இளைஞர்களாகிய எங்களுக்கு வடமாகாண சபை உறுப்பினராகிய நீங்கள் இளைஞர்கள் மீது இவ்வாறான நம்பிக்கை வைத்து அவர்களது வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு செய்துவரும் செயற்பாடுகள் அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று மேலும் உங்கள் இன,மத,மொழி,பிரதேசம் வேறுபாடு அற்ற  சேவைகள் எமக்கு மட்டுமல்லாது உண்மையான திறமை உடைய அனைத்து இளைஞர்களுக்கும் கிடைக்க வேண்டும் அதுமட்டுமல்லாமல் மீண்டும் உங்களுக்கு இந்நேரத்தில் மனமார்ந்த நன்றியை கழகத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் ” என விளையாட்டுக்களை வீரர்கள் தெரிவித்தனர்17888897_1372056669528882_964980129_n 17888988_1372056369528912_634581826_n (1) 17888114_1372056412862241_1826035289_n (1)