இஸ்மாயில் எம்.பி தலைமையில் சம்மாந்துறையின் அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு!

சம்மாந்துறையின் அபிவிருத்தி தொடர்பான திட்ட அறிக்கை தயாரித்தல் தொடர்பான செயலமர்வு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் ஏற்பாட்டில் நிந்தவூர், தோம்ப கண்ட ஹோட்டலில் இடம்பெற்றது.
சம்மாந்துறைப் பிரதேச சபை தவிசாளர் நௌசாட், பிரதேச செயலாளர் ஹனீபா உள்ளிட்ட கல்வியலாளர்களும் நிர்வாகிகளும் பங்கேற்ற இச்செயலமர்வில், பிரதம வளவாளராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் போராசிரியர் ஜயந்நலால் ரத்னசேகர அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
(ன)