ஊரடங்குச் சட்டத்தை உடன் அமுல்படுத்துமாறு பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் கோரிக்கை!!!

ஊரடங்குச் சட்டத்தை உடன் அமுல்படுத்துமாறு பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் விடுத்த கோரிக்கையை ஏற்று விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவம் களத்தில்

மன்னாரில் இருந்து கொழும்பு திரும்பிய அமைச்சர் காலிக்கு விரைகிறார்

கட்டுங்கடங்காத நிலைமையில் போய்க்கொண்டிருக்கும் காலி ஜிந்தோட்டை வன்முறைகளை உடன் கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சற்று நேரத்துக்கு முன்னர் அமைச்சர் றிஷாட் விடுத்த கோரிக்கையை ஏற்று பிரதமர் இராணுவம் மற்றும் அதிரடிப்படைகளை களத்தில் இறக்கியுள்ளார்.

ஏற்கனவே காலி மாவட்டத்தைச் சேர்ந்த,  அமைச்சர் வஜிர அபேயவரத்தனவுடன் அமைச்சர் றிஷாட் பேசியதையடுத்து, அவர் களத்துக்குச் சென்று நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர   நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் றிஷாட்டிடம் தெரிவித்தார்.

(ஊடகப்பிரிவு)