எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மு.கா. மற்றும் அ.இ.ம.கா இணைத்து புத்தளமாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பான கலந்துரையாடல்

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் புத்தளம் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,கூட்டிணைவு சம்பந்தமான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த   (23) புத்தளம் நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இப்பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளர் கே.ஏ.பாயிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம்,கட்சியின் பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா,மற்றும் இரு கட்சியினதும் புத்தள மாவட்ட உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.