எனக்கு கிடைக்கவிருந்த மேலுமொரு பிரதியமைச்சை, TNA தடுத்தது – அப்துல்லா மஹரூப் வேதனை

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அதிகாரங்களை  கைப்பற்றுவதன் ஊடாக எமது சமூகத்துக்கு விடிவு கிடைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறைந்த பட்சம் கிழக்கில் மாகாண சுகாதார அமைச்சையும் அதிகூடிய பட்சம் முதலமைச்சையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.
 தோப்பூரில் நேற்று ஞாயிற்றுக் கிழமை முன்னெடுக்கப்பட்ட  அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைத்து மக்கள் மத்தியில்  உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
 பிரதியமைச்சரின் பிரத்தியோகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, கனிய மணல் கூட்டுத் தாபன நிறைவேற்றுப் பணிப்பாளர் அப்துல் ரசாக் நளீமி,இணைப்பாளர் ஈ எல் அனீஸ்,கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான நிஸார்தீன் முஹம்மட், எம்.எம்.மஹ்தி உட்பட சேருவில பிரதேச சபை உறுப்பினர் அன்வர்,மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ்,ஜெஸீலா ஆகியோர்கள் பங்குபற்றிய கலந்துரையாடலின் போதே தெரிவித்தார்.
 தொடர்ந்தும் உரையாற்றிய பிரதியமைச்சர்,
 தனக்கு கப்பல் துறை பிரதியமைச்சுடன் சேர்த்து கிழக்கு அபிவிருத்தியும் கிடைக்கவுள்ளதை தமிழர் விடுதலை கூட்டணியே தடுத்தது .
 பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் போன்றவர்களாலும் தனக்கு கிடைக்கவிருந்த மேலும் ஒரு பிரதியமைச்சான கிழக்கு அபிவிருத்தியை தடுத்தனர் .
 கிழக்கில் பல்வேறு பிரச்சினைகள் உருவெடுத்துள்ள நிலையில் இதனை தீர்ப்பதற்கான ஒரு கட்டமாக குறித்த அமைச்சு அமைந்திருக்கும் அபிவிருத்திக்காக மட்டுமல்ல மக்களுடைய பல் தரப்பட்ட காணி பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டிருக்கும் இதற்காக பக்க பலமாக செயற்பட்டிருப்பேன் எமது தேசிய தலைமை றிசாத் பதியுதீன் தனி ஒரு மனிதனாக நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாத்தார் எங்களுக்கான உரிமைகளையும் மாகாண சபை தேர்தல் ஊடாக நிரூபித்து தாங்கள் யார் என்பதை மேலும் காட்ட முனைவோம்.
 தங்களை பொறுத்த மட்டில் எமது கட்சியானது தனி ஒரு இனத்துக்கோ சமூகத்துக்கோ சொந்தமானதல்ல மூவின சமூகத்தையும் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு தேசிய கட்சியாக உருவெடுத்தளை யாவரும் அறிவோம்.
 சமூக விடுதலைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தொடர்ந்தும்  போராடி வருகிறது.
 எதிர்வரும் மாகாண சபையின் அதிகாரங்களை எமது கட்சி கைப்பற்ற வேண்டும் இதற்காக கிண்ணியாவில் இருந்து டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களை தெரிவு செய்து வேட்பாளராக நிறுத்தவுள்ளோம் என்றார்.