எருக்கலம்பிட்டி கிழக்கு அ.மு.க பாடசாலை நுழைவாயல் கட்டுவதாற்கான அடிக்கல் நாட்டுவிழா

கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது நிதி ஒதுக்கீட்டில் எருக்கலம்பிட்டி கிழக்கு அ.மு.க பாடசாலைக்கான நுழைவாயல் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது

எருக்கலம்பிட்டி மகளீர் பாடசாலை ஆசிரியர் அஸ்மீன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது பிரத்தியேக செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்

மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களது மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் முஜிபுர் ரகுமான் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் மகிசா மற்றும் மதகுரு மார்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது