ஒலுவில் கடலரிப்பு மற்றும் துறைமுகம் சம்பந்தமாக பிரதேச முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு

ஒலுவில் கடலரிப்பு மற்றும் துறைமுகம் சம்பந்தமான இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்வதற்காக எதிர்வருகின்ற 2019.03.31ஆம் திகதி ஒலுவில் துறைமுகத்திற்கு வருகைதரவிருக்கின்ற உயர்மட்ட குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய விடயங்கள் சம்பந்தமாக இன்று (17) ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதியில் பிரதேச முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதன் போது துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் அஷ்ரப் தாஹிர், மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் ஊடகவியலாளர் முஷர்ரப், மற்றும் பாலமுனை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் பீ.எம்.ஹுசையிர் உட்படபல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.