ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற சரண்யாவிற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாட் வாழ்த்து!

1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட சசிகுமார் சரண்யாவிற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (08) தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தேசிய இளைஞர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 31வது தேசிய விளையாட்டு நிகழ்வில், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்ற முல்லைத்தீவு, துணுக்காயைச் சேர்ந்த சசிகுமார் சரண்யாவுக்கு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன், பரிசுகளையும் வழங்கி வைத்தார்.