ஓட்டமாவடி மத்திய குழு மற்றும் வட்டாரக் குழுக்களுடனான விஷேட கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஓட்டமாவடி மத்திய குழு மற்றும் வட்டாரக் குழுக்களுடனான விஷேட கலந்துரையாடலொன்று, கட்சியின் தவிசாளர் அமீர் அலியின் தலைமையில்  இடம்பெற்றது.

தவிசாளர் அமீர் அலியின் இல்லத்தில் (14) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், எதிர்வரும் பொதுத்தேர்தல் குறித்த வேலைத் திட்டங்கள் மற்றும் அதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கல்விமான்கள், மௌலவிமார், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.