கண்டி, ஹிஜிராகமை மையவாடி பாதை செப்பனிடல் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின்  நிதி ஒதிக்கீட்டில், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீனின் வேண்டுகோளுக்கு அமைய, உடபலாத பிரதேச சபை வேட்பாளர் முகம்மட் ரமலானின் கோரிக்கைக்கு இணங்க, கண்டி, தெல்பிடிய ஹிஜிராகமை மையவாடிக்கு செல்லும் பாதையை செப்பனிட்டு கொண்ங்கிரீட் செய்யும் பணிகள்  நேற்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஹம்ஜாட் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், உடபலாத பிரதேச சபை உறுப்பினரான பசால் எ.காதர், பாததும்பரை பிரதேச சபை உறுப்பினரான இர்சாட் சிஹாப்டீன் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், ஊர் மக்கள் என ஏராளமானவர்கள் கலந்துசிறப்பித்தனர்.