கந்தளாய் அக்போபுர ரஜமகா விகாரையின் விகாராதிபதி விமல தேரர் அவர்களை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் சந்தித்துள்ளார்.

கந்தளாய் அக்போபுர ரஜமகா விகாரையின் விகாராதிபதி விமல தேரர் அவர்களை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது இன்று (16) விகாரையில் இடம் பெற்றது. பிரதேச அபிவிருத்தி தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தை இடம் பெற்றது. தங்களுக்கான சகல அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்களையும் வழங்கவுள்ளதாக பிரதியமைச்சர் விகாராதிபதியிடம் தெரிவித்தார்.

இன மத பேதமற்ற நல்லிணக்க சந்திப்பாகவும் மேலும் இச் சந்திப்பு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்திப்பில் கந்தளாய் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சட்டத்தரணி மதார், பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ் போன்றோர்களும் உடனிருந்தனர்.