கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குள்  முடிக்கப்பட்ட வீதிகள் மற்றும் வடிகால்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

கடந்த வருடம் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குள்  முடிக்கப்பட்ட வீதிகள் மற்றும் வடிகால்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று16.07.2019 இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய ,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு மக்களின் பாவனைக்காக கையளித்தார்.
இந்நிகழ்வில்  பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் , ஜெளபர், நெளபர், ஜெஸ்மின், பாயிஸா மற்றும் வட்டாரக் குழு தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்