கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 60வது யுவதிகலுக்கான தையல் பயிற்சி நிலையம்கள்..

அப்துல் அஸீஸ்​ 

கல்முனை பிரதேசத்துக்குட்பட்ட கல்முனைக்குடி மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய இடம்களில் தையல் பயிற்சி நிலையமகளை  திறந்து வைக்கும் நிகழ்வுகள் நேற்று   (03ஆம் திகதி ) இடம்பெற்றது.
இலங்கை புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தினால் அமைக்கப்படுள்ள இந்த பயிற்சி நிலையம்களின்   ஊடக கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 60வது யுவதிகள்  பயன்பெறவுள்ளனர்.
புடைவை மற்றும் ஆடைகள்நிறுவனத்தின்அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட்,  கல்முனை மாநகர சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா சதேச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான சீ.எம்.முபீத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச நடவடிக்கைகள் பொறுப்பாளர்  அன்வர் முஸ்தபா உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொன்டனர்.