காத்தான்குடியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலி, காத்தான்குடி, கர்பலா பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

முதன்மை வேட்பாளர் அமீர் அலி அவர்களை ஆதரித்து இடம்பெற்ற இந்தக் கூட்டத்தின் போது, மு.கா ஆதரவாளர்கள் சிலர் மக்கள் காங்கிரஸில்  இணைந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில் நகர சபை உறுப்பினர் முகைதீன் சாலி, முன்னாள் நகர சபை உறுப்பினர் மாஹிர், மத்திய குழு செயலாளர் சப்ரி, மஞ்சன்தொடுவாய் இணைப்பாளர் றம்லான் மற்றும் பிரமுகர்களும் கலந்துசிறப்பித்தனர்.