காவத்தமுனை புதிய வீட்டுத்திட்டத்திற்கு குடிநீர் தாங்கி!!!

முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களிடம் வட்டாரக் குழு மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.ஜௌபர் விடுத்த வேண்கோளுக்கு அமைவாக, அவரது நிதியொதிக்கீட்டில் காவத்தமுனை புதிய விட்டுத்திட்டத்திற்கு குடிநீர் தாங்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.ஜௌபர் தலமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், தவிசாளர் ஐ.டி.அஸ்மி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் வட்டாரக் குழுத் தலைவருமான ஆதம்பாவா, கிராம சேவகர் அஸ்வர் மற்றும் வட்டாரக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.