கிண்ணியாவில் இயங்கி வரும் NAMS கல்லூரியில் பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கான பட்பமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!!!

கிண்ணியாவில் இயங்கி வரும் NAMS கல்லூரியில் பட்டப்படிப்புகளை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கான பட்பமளிப்பு விழா இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது இன்று (16) கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் கல்லூரியின் தலைவர் முஸ்தாக் தலைமையில் இடம் பெற்றது.
கலை இளமானி பட்டம், டிப்ளோமாதாரிகள், முதுமானி பட்டங்களை பூர்த்தி செய்தோர்களுக்கான பட்டங்களே வழங்கப்பட்டன.

துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்லூரியின் தலைவரால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
குறித்த பட்டமளிப்பு விழா நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம் .சனூஸ், கம்போடிய நாட்டின் பிரதிநிதி, விரிவுரையாளர்கள், பெற்றார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.