கிண்ணியா நகர சபை NFGG உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின் (NFGG) கிண்ணியா நகர சபை உறுப்பினர்உமர் றழி ரனீஸ், மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களுடன் இன்று (04) உத்தியோகபூர்வமாக தனது ஆதரவாளர்களுடன் இணைந்துகொண்டார்.
 
திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின், தொலைபேசி சின்னத்தில், முதன்மை வேட்பாளராக களமிறங்கியிருக்கும் முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் பயணத்தில் இணைந்து கொண்ட உமர் அலி ரனீஸ், பொதுத் தேர்தலின் போது அவரின் கரங்களை பலப்படுத்தவுள்ளார்.
 
குறித்த நிகழ்வு, பெரியாற்று முனை பகுதியில் இடம்பெற்றது. இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான ஐயூப், நளீம், சப்ரீன் எம்.எம்.மஹ்தி, நிஸார்தீன் முஹம்மட், கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸ்மி உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.