குருநாகல், குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான அலுவலக திறப்பு விழா!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், குருநாகல் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுகின்றது.

அந்தவகையில், குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதிக்கான அலுவலக திறப்பு விழா, நேற்று மாலை (28), மெடிவெவ, கெகுணகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது.

குருநாகல் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சக்தியில், 16 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் குளியாப்பிட்டிய வேட்பாளரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.என்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசிய ஒற்றுமைக்கான பாக்கிர்மாக்கார் நிலையத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைர்தீன், முன்னாள் அமைச்சர் உபாலி பியசோம, குளியாப்பிட்டிய பிரதேச சபை உப தவிசாளர் இர்பான் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான சபீர், அஸ்ஹர், இல்ஹாம் சத்தார், அன்பாஸ் அமால்தீன் ஆகியோர் உட்பட பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பல்வேறு சங்கங்களின் உறுப்பினர்கள், உலமாக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.