கெக்கிராவ, கொல்லங்குட்டி காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

அனுராதபுரம், கெக்கிராவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொல்லங்குட்டி பகுதியில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் வன வள பாதுகாப்பு திணைக்களத்தின் அனுராதபுர மாவட்ட உயர் அதிகாரிகள் ஆகியோர் குறித்த இடத்திற்கு இன்று (07) நேரடியாக விஜயம் செய்தனர்.

இஷாக் எம்.பி மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர், கொல்லங்குட்டி பிரதேச மக்களுடன் இந்தப் பிரச்சினைகள் சம்மந்தமாக கலந்துரையாடியதுடன், இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மிக வேகமாக எட்டபடும் வகையில் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

(ன)