சஜித்தின் ஆட்சி காலத்தின் எனது பாராளுமன்ற கிடைப்பனவுகள் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ஏழை மாணவர்களுக்கு – உறுதிமொழி அளித்தார் இஷாக் எம்.பி.

சஜித் பிரேமதாசவின் ஆட்சி காலத்தில் தனக்கு கிடைக்கப்பெறும் பாராளுமன்ற கிடைப்பனவுகளை அனுராதபுர மாவட்டத்தில் ஏழை குடும்பங்களில் வசிக்கும் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புலமை பரிசில் ஊடாக வழங்குவதாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் சத்தியக்கடதாசி மூலம் உறுதிமொழி அளித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து அனுராதபுரத்தில் நடைபெற்ற “ஒன்றாய் முன்னோக்கி” மக்கள் பேரணியில் கலந்துகொண்டபோதே பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் குறித்த சத்திய கடதாசியினை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களிடம் வழங்கி வைத்தார்.

மேலும் அந்த சத்தியக்கடதாசியில்,

இன, மத பிரச்சனைகளை தோற்றுவிக்கும் எந்தவொரு தீர்மானங்களையோ, நடவடிக்கைகளையோ எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் எடுக்க மாட்டேன் என உளப்பூர்வமாக உறுதியளிக்கிறேன். எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஐந்து வருடமும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்கள் தனது பாராளுமன்ற கிடைப்பனவுகளை அனுராதபுர சிறுநீரக வைத்தியசாலைக்கு வழங்கி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.