சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கான கட்டிட திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் S.M.M இஸ்மாயில் கலந்துகொண்டார்..

“அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் நாடுபூராகவும் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு இன்று பௌதீக அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கான கட்டிட திறப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். S.M.M இஸ்மாயில் அவர்கள் தெரிவிப்பு.

உலகில் அநேகமான நாடுகளின் அவர்களுடைய மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்கு 6% ஒதுக்கீடு செய்யப்படுவதனை காணமுடிகிறது. அதுவே யுனெஸ்கோ ஐக்கிய ஸ்தாணங்களின் இலக்காகவும் உள்ளது. அதே போன்றுதான் அண்மைக்காலங்களில் எமது நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தவதுடன் கல்விக்காக 6% ஒதுக்கீடுகளை ஒதுக்கி அதிலும் கூடியதாக பாடசாலைகளின் அபிவிருத்திகளை மேற்கொண்டதனை காணமுடிகிறது.

அதே போன்று இன்று எமது நாடுகளில் ஆசிரியர்களுக்கு சில பயிற்சிகளை வழங்கும் நோக்குடன் வெளிநாடுகளில் பயிற்சிகளை வழங்குவதனை பார்க்கும்போது கல்விக்கு எந்த அளவுக்கு முக்கியதுவத்தினை இந்த அரசாங்கம் வழங்குவதனை காணக்கூடியதாக உள்ளது. என கௌரவ பேராசிரியர் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.

மேலும் இன்று கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ. விஜயகலா மகேஸ்வரனின் வருகையானது எம்மண் கண்டுகொண்ட பாரியதொரு வெற்றியாயாகும். ஏனொன்றால் இராஜாங்க அமைச்சர் அவர்கள் கல்வி தொடர்பான பல முக்கிய செயற்திட்டங்களை நல்லாட்சி அரசாங்கத்தினூடாக எமது நாட்டுக்கு செய்துள்ளார்கள். அப்படியாப்பட்ட ஒரு மனிதர் இன்று எமது நிகழ்வில் பிரதம அதிதியாக சிறப்பிப்பது எமக்கு பெருமையை உண்டுபண்ணுகிறது.

அதே போன்று எதிர்வரும் தினங்களில் எமது பிரதேசத்தில் மாகாண சபையூடாக மும்மொழி பாடசாலை ஒன்றையும் உருவாக்கும் நோக்குடன் செயற்திட்டத்தினை குறிப்பிட்ட அதிகாரிகளிடம் கையளித்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் அவை நிறைவு பெறும் பட்சத்தில் எம்மண் மற்றுமொரு வெற்றியை கண்டுகொள்ளும். இதற்கான முயற்சிகளையும் செய்துகொண்டுள்ளோம். என சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கான கட்டிட திறப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் உரையாற்றப்பட்டது.