சர் ஜோன் கொத்தலவல மாவத்தை வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகரசபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான அஷார்தீன் மொய்னுதீனின் நிதி ஒதுக்கீட்டில், சமூக சேவையாளர் கனீ பாயின் வேண்டுக்கோளுக்கிணங்க, குருநாகல், சர் ஜோன் கொத்தலாவல வீதியின் புனரமைப்புப் பணிகள் நேற்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மாநகர சபை உறுப்பினர் அஷார்தீன் இந்தப் பணிகளை இன்று நேரில் சென்று பார்வையிட்டதுடன், புனரமைப்பு வேலைகளை துரிதகதியில் பூர்த்தி செய்து, விரைவில் மக்கள் பாவனைக்காக வீதியை கையளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

(ன)