சாய்ந்தமருதில் அ.இ.ம.கா வின் கிளைகள் அமைக்கப்படும் நடவடிக்கைகள் தீவிரம்

– எம்.வை.அமீர் –

சாய்ந்தமருதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாதர்களுக்கும் இளைஞர்களுக்குமான கிளைகள் அமைக்கப்படும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெறுவதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி ஏ.எல்.ஜஹான் தெரிவித்தார்.

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக அண்மையில் சாய்ந்தமருதில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் கிளைகள் அமைக்கப்பட்டு ஏ.எல்.எம் அன்வரை அமைப்பாளராக கொண்டு மத்திய குழுவும் அமைக்கப்பட்டது.

ஏற்கனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருதிற்கான 17 பிரிவுகளுக்கும் ஆண்களுக்கான கிளைகளும் அதற்கான மத்திய குழுவும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது, அதன் அடுத்தகட்டமாக மாதர்களுக்கும் இளைஞர்களுக்குமான கிளைகள் அமைக்கப்படும் நடவடிக்கைகள் தீவிரமாக இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வகையில் கட்சியின் பிரதித் தலைவரும், கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும், அம்பாறை மாவட்டத்திற்குமான அமைப்பாளரும், இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமாகிய கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது 2ம் மற்றும் 4ம் கிராம சேவகர் பிரிவிற்கான மாதர் கிளைகள் அமைக்கப்பட்டது. என்றும் தெரிவித்தார்.