சாய்ந்தமருது அரசியல் செயற்பாட்டுக் குழு ஒன்றுகூடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது அரசியல் செயற்பாட்டுக் குழு நேற்று (02) ஒன்று கூடியது.
மாவட்ட மத்தியகுழு உறுப்பினர் முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில் கட்சியின் தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் ஜவாத், மாவட்ட செயற்குழுவின் தலைவர் அன்ஸில், மாவட்ட கொள்கைபரப்புச் செயலாளரும் மாவட்ட செயற்குழு செயலாளருமான ஜுனைடீன் மான்குட்டி மற்றும் வட்டாரப் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
இக் கலந்துரையாடலின் போது, சாய்ந்தமருது பிரதேச 17 குறிச்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு, சாய்ந்தமருது மத்தியகுழுவை உடனடியாக அமைப்பது சம்பந்தமாகவும், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் தவிசாளர் அமீர் அலி ஆகியோரின் சாய்ந்தமருதுக்கான வருகை குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், பல சிறப்பான முடிவுகளும் மேற்கோள்ளப்பட்டன.
அத்துடன், மத்திய குழுவை அமைப்பதற்கான 17 பேர் கொண்ட குழுவும் அதிதிகள் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.