சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்குவதன் மூலமே நாளைய தலைவர்களை எதிர்பார்க்கலாம்

நாட்டில் இருக்கின்ற கல்வித் திட்டங்களில் பல கொள்கைகள் காணப்பட்டாலும் கல்விக்கான அதிமான நிதியை ஒதுக்கீடு செய்து சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்குவதன் மூலமே நாளைய தலைவர்களை எதிர்பார்க்கலாம் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.
குச்சவெளியில் நேற்று (09) திங்கட் கிழமை அந்நூரியா மகாவித்தியாலயத்தில் இடம் பெற்ற” அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் ஆசிரியர் விடுதிக்கான நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
அதிகமான பல்வேறு நிதிகள் மூலம் கல்விக்காகவே அதிக நிதியை தான் ஒதுக்கியுள்ளேன் இம் முறை பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஐந்து பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது பாடசாலையில் வளப்பற்றாக்குறைகள் தீர்க்கப்பட வேண்டும் இதற்காக பாரிய நிதியினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஒதுக்கீடு செய்து இவ்வாறான கல்வித் திட்டங்கள் ஊடாக பல வேலைகளை நடை முறைப்படுத்தி வருகிறார் விஞ்ஞான ஆய்வு கூடங்கள்,தகவல் தொழில் நுட்ப கூடங்கள்,மண்டபங்கள் என பல தேவைபாடுகள் பாடசாலைகளில் காணப்படுகிறது இவ்வாறான குறைகளை நிவர்த்திக்கப்பட வேண்டும் இதற்காக எனது நிதியில் இருந்து அதிகமானவற்றை கல்வி அபிவிருத்திக்காக ஒதுக்கியுள்ளேன் விசேட நிதிகள் மூலம் அதாவது அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் அமைச்சின் கீழ் உள்ள நீண்ட நாள் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல் திட்ட அலகு ஊடாகவும் திருகோணமலையில் பல அபிவிருத்திகளை செய்துள்ளோம் .சிறந்த கல்விமான்களை உருவாக்கி இந்த நாட்டில் எமது நாளைய தலைமுறையினர்களாக வளர இவ்வாறான கல்வி திட்டங்கள் பெரும் பங்காற்றுகிறது என்றார்.
இக் கட்டிட திறப்பு விழா நிகழ்வில் பாடசாலை அதிபர் சாஜிபு மற்றும் திருகோணமலை வலயக் கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர்களான ஹாபிஸ் மரைக்கார் ,மகாதேவா ,குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்களான ரொசானா,பர்சானா,கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.