சிறுபான்மை சமூகங்களின் அடக்குமுறைக்கு எதிரான எழுச்சிப் பேரணி கிண்ணியாவின் ஊடாக!

சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்தும், கண்டித்தும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி, இரண்டாவது நாளாக நேற்று (04) மாலை மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை, கிண்ணியாவை வந்தடைந்தது.  

இவ் எழுச்சிப் பேரணியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் உட்பட சிவில் சமூக பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, தமது ஆதரவை தெரிவித்தனர்.