சீனாவில் அமைந்துள்ளது போன்று கூட்டுறவு கிராமங்கள் இலங்கையிலும்

சீனாவில் அமைந்துள்ளது போன்று கூட்டுறவு கிராமங்கள் இலங்கையிலும் ஏற்படுத்துவது  தொடர்பில் சீனா கூட்டுறவு பிரதான சங்கத்தின்  தலைவரும்,சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவருமான லீ சுங் செங்குக்கும் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்தி்ப்பொன்று இடம் பெற்றுள்ளது.

வியாட்நாமில் நடைபெறும் ஆசிய பசுபிக் நாடுகளின் அமைச்சர்களின் மாநாட்டு நிகழ்வினையடுத்து இந்த சந்தி்ப்பு ஹனோயில் அமைந்துள்ள ஹோட்டல் மிலீயாவில் இடம் பெற்றது.

குறி்ப்பாக சீனா அரசாங்கம் இலங்கையுடன் மிக நெருக்கமாக செயற்பட்டுவருவதாகவும்,எதிர்காலத்தில் கூட்டுறவு துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலும் உதவிகளை வழங்கவுள்ளதாகவும் இரு தரப்பு பேச்சுவார்த்தையின்  போது  பேசப்பட்டது.

2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி சீற்றத்தினையடுத்து இம்மக்களது வாழ்வாதார மற்றும் அவசர தேவைகளுக்காக சீன கூட்டுறவு சங்கம் உதவியதாக சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் இதன்  போது சுட்டிக்காட்னார்.

இந்த மனிதாபிமான உதவிகளுக்காக தமது நன்றியினையும் ,இலங்கை அரசாங்கத்தின் நன்றியினையும் இதன்  போது அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

இலங்கை கூட்டுறவு ஆணையாளர் சுலைமான் லெப்பை நசீர்,தேசிய கூட்டுறவு கவுன்சிலின் செயலாளர் அசன்க ஆகியோரும் கலந்து கொணடனர்.DSCF3341 DSCF3351 (1)