ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட “வனரோபா” நிகழ்வின் தொடர்ச்சியாக முசலியில் மரநடுகை நிகழ்வு!

கடந்த 05ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால், மன்னார் மாவட்டத்தில் நடைபெற்ற “வனரோபா” மாபெரும் மரநடுகை நிகழ்வின் தொடர்ச்சியாக, முசலி பிரதேச சபைக்குட்பட்ட சில கிராமங்களில் மரநடுகை நிகழ்வு இன்று (07) இடம்பெற்றது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளரும், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ரிப்கான் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்,  மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான் மற்றும் முசலி பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் முகுசீன் றயீசுத்தீன் உட்பட முசலி பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

தேசத்தை இயற்கை சூழல் கொண்டதாக மாற்றியமைக்கும் திட்டமாக அமையப்பெற்ற இத் திட்டத்திற்கு,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முழுமையான பங்களிப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ன)