ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் மன்னார் பிரதேச மகளிர் மாநாடு..

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் ஏற்பாட்டில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின்வெற்றிக்கான மகளிர் மாநாடு மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றது.

குறித்த மகளிர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கொழும்பு மாநகர சபை முதல்வருமான ரோஸி சேனநாயக்க, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவின் பாரியார், மற்றும் கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் மன்னார் நகரசபை,பிரதேசபை உறுப்பினர்கள் ஆகியோருடன் மன்னார் பிரதேச மகளிர் சங்கங்களின் உறுப்பினர்கள் அதோபோல் பிரதேச மகளிர்களின் பங்குபற்றுதலுடன் மகளிர் மாநாடு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.