ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் தலைமையில் காரியாலயம் திறந்துவைப்பு….

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச ஆதரித்து விளாவெட்டுவானில் காரியாலயம் திறப்பு விழா கஜேந்திரன் தலைமையில் (06.11.2019) இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் லோகநாதன் , ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் மூர்த்தியும் கலந்து கொண்டார்.