தங்களை பிரபல்யப்படுத்துவதற்காக அமைச்சர் றிஷாத் மீது குற்றஞ்சாட்டுகின்றனர் – அஸ்கர் ரூமி

பாறுக் சிகான்

அமைச்சர் றிஷாத் மீது அபாண்டமாக குற்றம் சாட்டும் தரப்பு தங்களை பிரபல்யப்படுத்தும் வங்குரோத்து செயற்பாட்டில் ஈடுபடுவதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அஸ்கர் ரூமி குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது பல தரப்பால் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றது தொடர்பாக செய்திகள் தெரிவிக்கின்றனவே என கேட்டவேளை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தனது கருத்தில்

அமைச்சர் இன்று ஒரு தேசிய தலைவனாக மக்கள் மத்தியில் திகழ்கின்றார்.இவரை வீழ்த்த பலரும் நினைக்கின்றனர்.இது குறித்து பகல் கனவு காண்கின்றனர்.எப்போதும் அமைச்சர் எம்மக்கள் குறித்த சிந்தனையில் இருக்கின்றார்.இன மதம் பராமல் அனைவருக்கும் சேவை செய்பவர்.இத்தகைய வரலாற்று நாயகனை வீழ்த்த மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்.

சதிகாரர்கள் எப்போதும் சதி செய்வதை பற்றியே சிந்திக்கின்றனர்.அவர்களது செயற்பாடுகளை மக்கள் தற்போது நிராகரித்து வருகின்றனர்.இவ்வேளை தான் எமது மக்கள் வரலாற்று நாயகனான அமைச்சரை அல்லாஹவின் துணைகொண்டு சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
வளர்ந்து வரும் அரசியல்வாதிகளில் பலர் வங்குரோத்து அரசியலுக்காக பிரபல்யமான மக்கள் சேவகனை அபாண்டமாக பொய் தகவல்களை பரப்பி தாக்க முற்படுவது வேதனை தருகின்றது.

இதனூடாக தங்களது வங்குரோத்து நிலையில் உள்ள அரசியலை வளர்ப்பதற்கும் ,கட்சிகளை பிரபல்யப்படுத்தவும் முயல்கின்றனர்.
இது தவிர முனாபிக் கூட்டங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தேசிய தலைவரை களங்கப்படுத்த முயல்கின்றனர்.ஆனால் மக்கள் மத்தியில் இச் செயற்பாடு எடுபடாது என்பது யாவரும் அறிந்த உண்மை.

எப்போதும் காய்க்கின்ற மரத்திற்கு தான் கல்லெறி படும் என பழமொழி கூறுவது போன்று அமைச்சர் அல்லாஹ் துணையுடன் வளர்ந்து வரும் மக்கள் சேவகனாக அனைத்து மக்கள் மத்தியில் இனங்காணப்பட்டுள்ளார்.
மக்களினால் வளர்க்கப்படும் இம்மரத்தை பலரும் சாய்க்க பார்க்கின்றனர்.இவர்களுக்கு மக்கள் சக்தி என்ன என்று வெகுவிரைவில் தெளிவுபடுத்தப்படும்.

மர்ஹூம் எம்.எச் எம் அஷ்ரப் அவர்களிற்கு பின் அவரது அரசியல் வாரிசாக தற்போது மக்கள் அமைச்சர் றிஷாத் பதியுதினை கருதுகின்றார்கள்.அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் தனித்துவம் பெற்று விட்டார்.இத்தனைக்கும் காரணம் பாகுபாடு அற்ற சேவை ஆகும்.சிலருக்கு முகவரி இல்லாமல் நின்ற போது முகவரியை பெற்றுக் கொடுத்தமை எமது அமைச்சரையே சாரும்.

இவ்வாறாக எல்லோருக்கும் குரல் கொடுக்கும் தேசிய தலைவரை சதிகாரர்களின் வலையில் சிக்க விடாது மக்கள் ஒத்துழைப்பு தொடர்ந்து வழங்குவார்கள் என குறிப்பிட்டுள்ளதுடன் சதிகாரர்களின் சூழ்ச்சியில் இருந்து அவரை பாதுகாத்து எல்லா வல்ல அல்லாஹ் தஆலா அமைச்சரின் ஆயுளை நீடிக்க துஆசெய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.