தம்பலகம பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத்துக்கார அங்குரார்ப்பண நிகழ்வு

திருகோணமலை மாவட்டம் தம்பலகம பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (27) வியாழக் கிழமை தம்பலகம பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் இடம் பெற்றது.

குறித்த கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நட்டு வைத்தார்.
சுமார் 90 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இக் கட்டிடம் பல்வேறு நவீன வசதிகளை கொண்டதாக அமையப்பெறவுள்ளது

இதன் போது வைத்தியசாலையின் வளாகத்தினுள் நிர்மாணிக்கப்படவுள்ள மேலும் ஒரு சிறுவர் பூங்காவினையும் பிரதமர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார் கம்பரெலிய வேலைத் திட்டத்தின் கீழ் இருபது இலட்சம் ரூபா செலவில் குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மஃறூப், இரா.சம்மந்தன், எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹரூப், சன்சித் சமரசிங்க, உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட மாகாண சுகாதார திணைக்கள உயரதிகாரிகள், மாகாண அமைச்சின் செயலாளர் , திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.